திருநெல்வேலி, ஜன. 7- நெல்லை மேலப்பாளையம் காஜா பீடி நிர்வாகம் பீடி தொழிலாளர்கள் கடந்து 8 நாட்களாக சம்பளம் வழங்காமல் பீடி தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு வருங்காலமாக போனஸ் வழங்காமல் இழுத்தடிப்பது கண்டித்து தொழிலாளர்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள் பின்பு நிர்வாகத்துடன் சிஐடியு தொழிற்சங்க தலைவர் பேச்சுவார்த்தை நடத்தி பேச்சுவார்த்தையில் இன்னும் இரண்டு தினங்களுக்குள் கூலி வழங்கி விடுவதாகவும் வழங்குவதாகவும் ஒப்புதல் அளித்ததால் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர். ஆர். முருகன் சிஐடியு பீடி சங்க மாவட்ட தலைவர் சரவணபெருமாள், சிஐடியு பீடி சங்க பொதுச் செயலாளர் மாரிசெல்வம் காஜா பீடி சங்க தலைவர் முஸ்தபா மற்றும் நிர்வாகிகள் சாகுல் ஹமீது சையத் அலி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.