திருச்சிராப்பள்ளி, ஆக.21 - திருச்சி பிராட்டியூர் மேலஅர்ஜன தெரு வைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி கருப் பையா (56). இவர் கே.கே.நகர் பகுதியில் கட்டிடத்திற்கு சாரம் கட்டும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியில் பட்டு கருப்பையா தூக்கி வீசப்பட்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து கருப்பையாவின் மனைவி ஈஸ்வரி, கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இந்நிலையில், புகார் குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித் தும், உயர் மின்னழுத்த கம்பி அருகே கட்டிடம் கட்ட அனுமதி அளித்த மாநகராட்சி அதிகாரி யின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிட உரிமையாளரை கைது செய்ய வேண்டும். கருப்பையா குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில் கட்சியினர் மற்றும் அவரது குடும்பத்தினர், கருப்பையா வின் உடலை வாங்க மறுத்து சாலை மறிய லில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த காவல்துறை உதவி ஆணையர் ராஜூ பேச்சுவார்த்தை நடத்தியதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வெற்றிச்செல்வன், லெனின், அபி ஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேது பதி மற்றும் கருப்பையா குடும்பத்தினர் கலந்து கொண்டனர். தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி கருப்பையா குடும்பத் திற்கு உரிய இழப்பீடு வழங்குவது, சம்பந்தப் பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதைய டுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.