districts

img

மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் தமிழக முதல்வர் காணொலி உரையாடல்

திருச்சிராப்பள்ளி, ஏப்.17 - தமிழ்நாட்டில் 2003 முதல் 2013 வரை 10  ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கக் கோரி பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்காக ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் சனிக்கிழமை விவசாயி களுடன் கலந்துரையாடி, ஒரு லட்சம் பயனா ளிக்கு இலவச மின் இணைப்பு ஆணையை வழங்கி சிறப்பித்தார்.  இதனையொட்டி, திருச்சி மன்னார்புரம் காஜா  நகர் வி.எஸ்.எம்.மஹாலில் நடைபெற்ற முதல்வர்  விழா நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில், நகராட்சி  நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  இத்திட் டத்தில் பயன்பெற்ற விவசாய பெருமக்களுடன் பங்கேற்றார்.  ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும்  திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 3115 பேர்  உள்பட திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருச்சி,  பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவா ரூர், நாகப்பட்டினம், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 17,672 விவசாயிகள் இலவச மின் இணைப்பினைப் பெற்று பயன் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிகள், தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியினைத் தெரிவித்தனர்.  இந்த விழா திருச்சி சமயபுரம், லால்குடி, மணப்பாறை, முசிறி, துறையூர் ஆகிய 6 இடங்க ளில் நேரடி ஒளிபரப்பு நடைபெற்றது. இதில் ஏராள மான விவசாயப் பெருமக்கள், மக்கள் பிரதிநிதி கள், மின்வாரியப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். 

கரூர்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக் கிழமை சென்னை அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், ஓராண்டில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் பெற்று  பயனடைந்த விவசாயிகளுடன் கலந்துரையாடி னார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.