திருச்சிராப்பள்ளி, மார்ச் 4 - தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்களை பாதுகாக்க வேண்டும். 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனே இறுதிப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 1.4. 2003-க்கு பின் பணியில் சேர்ந்தவர் களுக்கு கழக ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு, மருத்துவ காப்பீடு, ஓய்வு காலப்பலன்களை உடனே வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் - செலவுக்குமான வித்தி யாச தொகையை தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். தேவையான உதிரி பாகங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் வெள்ளியன்று காலை தொடங்கி சனிக்கிழமை மதியம் வரை 26 மணிநேர தொடர் உண்ணாவிரத போராட்டம் போக்குவரத்து கழக திருச்சி புறநகர் கிளை முன்பு நடை பெற்றது. உண்ணாவிரத போராட்டத் திற்கு சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்க மண்டலத் தலைவர் சீனிவா சன் தலைமை வகித்தார். உண்ணா விரதத்தை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை வலி யுறுத்தி சங்க பொதுச் செயலாளர் கருணாநிதி, பொருளாளர் சிங்கரா யர், துணைத் தலைவர்கள், துணை பொதுச் செயலாளர்கள் ஆகியோர் பேசினர். சனிக்கிழமை மதியம் உண்ணா விரதத்தை முன்னாள் சட்ட ஆலோ சகர் ஸ்ரீதர் முடித்து வைத்து சிறப்பு ரையாற்றுகிறார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசுப் போக்கு வரத்துப் பணிமனை முன்பாக நடை பெற்ற போராட்டத்திற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) புதுக்கோட்டை மண்டல பொதுச் செயலாளர் எஸ்.பால சுப்பிரமணியன் தலைமை வகித் தார். போராட்டத்தை தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டச் செயலா ளர் ஏ.ஸ்ரீதர் பேசினர். முடித்து வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் உரையாற்றினார். போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா, ஓய்வுபெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளார் எஸ்.இளங்கோவன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சி.அன்புமணவாளன் ஆகியோர் பேசினர். கோரிக்கை களை விளக்கி சங்க நிர்வாகிகள் ஆர்.மணிமாறன், கே.கார்த்திக்கே யன், எஸ்.சாமியஅய்யா, என்.முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசி னர்.
கும்பகோணம்
கும்பகோணம் அரசு போக்கு வரத்து கழக தலைமையகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளன தலை வர் மணிமாறன் தலைமை வகித் தார். சிஐடியு தஞ்சை மாவட்ட செய லாளர் ஜெயபால் உண்ணா விரதத்தை துவக்கி வைத்தார். போராட்டத்தில் சம்மேளன கௌர வத் தலைவர் ஆர்.மனோகரன், பொதுச் செயலாளர் கோவிந்த ராஜ், சம்மேளன நிர்வாகி கண்ணன், பொருளாளர் வெங்கடாஜலபதி மற்றும் கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆ.செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.