districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் ஜன.19-இல் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

திருச்சிராப்பள்ளி, ஜன.15 - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ) வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர்களுக்கான திறன் கண்டறிவு முகாம் ஜன.19  அன்று திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் காலை  7.30 மணிக்கு நடக்கிறது.  தமிழகத்தின் பிற மற்றும் திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டையைச் சேர்ந்த 13 வயது முதல் 21 வயதுள்ள தகுதி யான வீரர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம். தமிழகம் தவிர்த்து வேறு இடங்களில் பிறந்தவர்கள், ஓர் ஆண்டிற்கான வசிப்பிடம் மற்றும் ஓர் ஆண்டு கல்வி கற்றதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும். 19 வயது  மற்றும் அதற்கு மேல் உள்ள வயது பிரிவில் தமிழக அணிக் காக விளையாடியவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள  முடியாது.  வீரர்கள் தேர்வில் கலந்து கொள்பவர்கள், கிரிக்கெட்  உடையில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று அல்லது  அதற்கு முன்பு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையை எடுத்து வர வேண்டும். இதற்கான  விண்ணப்பத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வலை தளத்தில் பதிவிறக்கி பூர்த்தி செய்து எடுத்து வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் சமத்துவ பொங்கல்

தஞ்சாவூர், ஜன.15 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் பாரம்பரிய  மீனவர் நலச்சங்கம் சார்பில், சமத்துவப் பொங்கல்  விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மீனவர் நல வாரிய துணைத் தலைவர் மல்லிப்பட்டினம் ஏ.தாஜுதீன்  தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றி யச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பி னர் ச.முரசொலி பங்கேற்று பேசினார்.

சமத்துவ பொங்கல் விழா 

திருச்சிராப்பள்ளி, ஜன.15 - திருவெள்ளறை வளர்ச்சிக் குழு, திருச்சி ராப்பள்ளி பொது காப்பீட் டுக் கழக ஊழியர் சங்கம் மற்றும் பிடல் பேக்ஸ் இணைந்து சமத்துவ பொங்கல் மற்றும் பரி சளிப்பு விழாவை திரு வெள்ளறையில் செவ்வா யன்று நடத்தின. விழாவிற்கு அன்பழ கன் தலைமை வகித்தார்.  விழாவை திருவெள் ளறை முன்னாள் ஊராட்சி  மன்ற தலைவர் லதா கதிர்வேல் துவக்கி வைத் தார். வழக்கறிஞர் தோழர்  முத்துக்குமார், தமிழ்நாடு  அறிவியல் இயக்க  மாநிலத் துணைத் தலை வர் மாணிக்கத்தாய், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் சிவ.வெங்க டேஷ் ஆகியோர் சிறப்பு  விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

தஞ்சாவூர் பெரியகோயிலில்  108 கோ பூஜை

 தஞ்சாவூர், ஜன.15 -  மகர சங்கராந்தி பெருவிழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு ஏறத்தாழ 2 ஆயிரம் கிலோ எடையுடைய காய்கனிகள், இனிப்பு வகைகளால் புதன்கிழமை அலங்காரம் செய்யப் பட்டது. இதைத்தொடர்ந்து 108 கோ பூஜை நடை பெற்றது. விழாவையொட்டி, இக்கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு செவ்வாயன்று சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மகா நந்திகேசு வரருக்கு புதன்கிழமை பல்வேறு காய்கனிகள், இனிப்பு களால் அலங்காரம் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த  எடை ஏறத்தாழ 2 ஆயிரம் கிலோ. தொடர்ந்து சிறப்பு  ஆராதனை நடைபெற்றது. மேலும், மகா நந்திகேசுவரர் முன் 108 கோ பூஜை நடைபெற்றது. இதில் 108 பசு மாடுகள் கொண்டு வரப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கோ.கவிதா, கோயில் செயல் அலுவலர் மணி கண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொறுப்பேற்பு

பாபநாசம், ஜன.15 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி)  விஜயலெட்சுமி பணியேற்றுள்ளார். இவர் ஏற்கனவே திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்  துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி யுள்ளார். தற்போது பதவி உயர்வில், பாபநாசம் வந்து உள்ளார்.

பட்டாசு ஆலை உரிமம்:  தற்காலிக ரத்துக்கு பரிந்துரை

விருதுநகர், ஜன.15- விருதுநகர் அருகே இயங்கி வரும் பட்டாசு ஆலை யின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டு மென மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார். விருதுநகர் அருகே உள்ளது குந்தலப்பட்டி. இங்கு, வைரமுத்து என்பவருக்கு சொந்தமான ஸ்ரீஐஸ்வர்யா பட்டாசு ஆலை உள்ளது. மாவட்ட வருவாய் அலு வலரின் உரிமம் பெற்று இயங்கி வருகிறது.     இந்த ஆலையில் விதிகளை மீறி பேன்சி ரக பட்டாசு கள் உற்பத்தி செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத் திற்கு தகவல் வந்தது. அதன்பேரில், தீப்பெட்டி, பட்டாசு  தனி வட்டாட்சியர்  திருப்பதி தலைமையிலான குழுவினர்  ஆய்வு செய்தனர். அதில், விதிமீறல்கள் இருப்பது  தெரிய வந்தது. இதையடுத்து ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவ லருக்கு பரிந்துரை செய்துள்ளார். 

பீரோ, சைக்கிள் கொடுக்கவில்லை என புகார் போராட்டத்தில் ஈடுபட்ட காளையர்கள்

மதுரை, ஜன.15- பாலமேட்டில் விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த  நிலையில் மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளை யின் உரிமையாளர்களுக்கும் பீரோ மற்றும் சைக்கிள்கள் வழங்குவதாக விழா கமிட்டியினர் அறிவித்தனர். அந்த  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அந்தப் பகுதியில்  வைத்து பீரோ மற்றும் சைக்கிள்கள் வழங்க முடியாது என்பதால் அதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் டோக்கனை பெற்றுக் கொண்ட காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அதனை, அந்த பகுதியில் உள்ள கோவிலில் இருந்த விழா கமிட்டி நிர்வாகிகளிடம் கேட்டபோது, அவர்கள் சரிவர  அதனை வழங்கவில்லை என தெரிகிறது.  இதனால் அவர்கள் பாலமேடு பிரதான சாலையில்  புதனன்று மாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மறிய லில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே ஒரு சிலர் வாடிவாசல் பகுதியில் பீரோ,  சைக்கிள் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.

தொடர் விடுமுறை களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திருநெல்வேலி, ஜன. 15- களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலையணை நீர்வீழ்ச்சியில் காணும் பொங்கலை முன்னிட்டு புதன்கிழமை காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். சுற்றுலா பயணிகள் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், கத்தி, அரிவாள், தீப்பெட்டி போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே தலையணை சோதனைச் சாவடியில் சுற்றுலா பயணிகளிடம் வனத்துறையினர் கடும் சோதனை செய்தனர். அதன் பின் தலையணைக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். உள்ளூர் மட்டுமின்றி, நெல்லை, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கார், வேன்களில் வந்திருந்தனர்.  இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமே தென்பட்டது. சோதனைச் சாவடி, கட்டணம் செலுத்துமிடம், சிறுவர் பூங்கா, நீர்வீழ்ச்சி பகுதிகளில் பொது மக்கள் கூட்டம் அலை மோதிய வண்ணம் இருந்தது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் வந்த சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்டும், உணவருந்தியும் காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக வனப்பகுதியில் வாகன நிறுத்துமிடங்கள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. களக்காடு புலிகள் காப்பக கள இயக்குநர் ரமேஷ்வரன் தலைமையில் வனசரகர் பிரபாகரன் முன்னிலையில் கோதையாறு, திருக்குறுங்குடி களக்காடு வன சரகங்களை சேர்ந்த வனத்துறை ஊழியர்களும், களக்காடு போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபோல திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவில், களக்காடு பச்சையாறு அணை, தேங்காய் உருளி அருவி, சிவபுரம், அகலிகை சாபம் தீர்த்த அய்யன் சாஸ்தா கோவில் பகுதிகளிலும் பொதுமக்கள் திரண்டு காணும் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

களக்காட்டில் அரசின் வாழைத்தார்  ஏல மையத்தில் காய்கறி சந்தை

திருநெல்வேலி, ஜன. 15- களக்காடு ஜெ.ஜெ. நகரில் தமிழ்நாடு அரசின் வாழைத்தார் ஏல மையம் செயல்பட்டு வருகிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் இதனை நிர்வகித்து வருகின்றனர். களக்காடு பகுதியில் விளையும் வாழைத்தார்கள் இங்கு ஏலமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு காற்கறிகள் சந்தையும் தொடங்கப் பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு 3 நாட்கள் சிறப்பு  விற்பனையும் நடந்தது. களக்காடு சுற்று வட்டார விவசா யிகள் காய்கறிகளை விற்பனைக்கு வைத்திருந்தனர். இதனை ஏராளமானோர் வாங்கி சென்றனர்.  காய்கறி சந்தையை நபார்டு வங்கியின் உதவி மேலாளர்  சசிக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுபற்றி  உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தமிழ்செல்வன் கூறுகையில், ‘களக்காடு பகுதி விவசாயி களுக்காக இந்த சந்தை தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள்  தங்களது விளைநிலங்களில் விளையும் பொருட்களை இங்கு வந்து விற்பனை செய்து கொள்ளலாம். வாரம் தோறும்  ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தை செயல்படும்’ என்றார்.

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம்

திருநெல்வேலி, ஜன.15 - நெல்லை- சென்னை இடையே வந்தே பாரத் ரயில்  8 பெட்டிகளுடன் இயக்கப் பட்டது. இந்த ரயில் எப்போதும்  கூட்டம் நிரம்பி காணப்படுவ தால் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று  பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்த னர். இதையடுத்து நெல்லை - சென்னை எழும்பூர் வந்தே  பாரத் ரயிலை 16 பெட்டி களாக மாற்றி கடந்த 11 ஆம்  தேதி முதல் இயக்க தென்னக  ரயில்வே திட்டமிட்டு அறி விப்பை வெளியிட்டது. ஆனால் இயக்கப்பட வில்லை.  ஜன.15 ஆம் தேதி முதல் 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக் கப்பட்டது. புதனன்று காலை  6.19 மணிக்கு திருநெல்வே லியில் இருந்து 16 பெட்டி களுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடு முறை என்பதால், வந்தே  பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டதால் ஏற்க னவே காத்திருப்பு பட்டிய லில் இருந்த பயணிகளுக்கு இடம் கிடைத்தது.  இதனால் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.’டிக்கெட் விலை அதிகமாக இருந்தாலும், இந்த விடுமுறை நாளில் சென்னைக்கு ரயிலில் பய ணித்தால் போதும் என்ற மன நிலையில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் செல்வதாக பயணிகள் தெரிவித்தனர்.  இந்த ரயிலில் 14 சேர் கார்  பெட்டிகளும், 2 எக்சி கியூட்டிவ் சேர் கார் பெட்டி களும் இணைக்கப்பட்டு உள்ளன.