திருவாரூர், செப்.14 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டக் குழு கூட்டம் திரு வாரூர் மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலை வர் எஸ்.தம்புசாமி தலைமை வகித் தார். மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் மாநிலக் குழு முடிவுகளை விளக்கி பேசினார். மாவட்டச் செயலாளர் எம்.சேகர் மற்றும் பலர் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 573 வருவாய் கிராமங்களி லும், கடந்த ஆண்டு பெய்த பரு வம் தவறிய கனமழையால், அனைத்து கிராமங்களிலும் நெற்ப யிர்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலை யில் டோக்கியோ பயிர் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விவ சாயிகள் இன்சூரன்ஸ்க்கான பிரீமிய தொகையை செலுத்தி உள்ளனர். ஆனால் இழப்பீடு வெளி யிடப்பட்டுள்ள பட்டியலில், 72 வருவாய் கிராமங்களுக்கு மட்டும் குறைந்த அளவிலான இழப்பீட்டுத் தொகை சுமார் ரூ.16 கோடி அறி விக்கப்பட்டுள்ளது. இயற்கை பாதிப்பு ஏற்பட்டால் பாதிப்பிலிருந்து விவசாயிகள் மீள்வதற்குத்தான் பயிர் காப்பீடு செய்கிறோம். ஆனால் முறை யான கணக்கெடுப்புகள் நடத்தப் படாமல், பெயரளவில் கணக்கெடுப் பதால் குறைந்த அளவு தொகை, சுமார் 18 சதவீத கிராமங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் முழுமையாக இழப்பீட்டுத் தொகை கிடைத்திட அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து முழுமையாக இழப்பீட்டை பெற்றுத் தர வேண் டும். காப்பீட்டு செய்த அனைவருக் கும் இழப்பீடு வழங்கிட வேண்டும். இல்லையெனில் இழப்பீட்டுத் தொகை கிடைக்காததை கண்டித் தும், பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஆதரவாகவும் செப்டம்பர் 20 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெறும். மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உரத் தட்டுப் பாடு நிலவுகிறது. இதனால் தனி யார் கடைகளில் யூரியா, டிஏபி, பொட்டாஸ் உள்ளிட்ட உரங்கள் வாங்கினால் குறிப்பிட்ட தொகைக்கு நுண்ணூட்டம் கட்டா யம் வாங்க வேண்டும் என்று நிர்ப்பந் தம் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் சீர்படுத்த வேண்டும். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், திருவா ரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, கோட்டூர், திருத்துறைப்பூண்டி கடைமடை பகுதிகளுக்கு கிடைக்க வில்லை. நீர்வளத்துறை உயர் அதி காரிகள் நீர் மேலாண்மையை முறையாக ஆய்வு செய்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், வாய்க்கால்கள், வடிகால்கள், குளங் கள் தூர்வாரப்படாமல் உள்ளன. குறிப்பாக குடவாசல் பேரூராட்சிப் பகுதியில் உள்ள கவரதோப்பு-பச்சைமடையாள் சுமார் 50 ஏக்கர் நிலத்திற்கான வடி காலாக பயன்பட்டு வந்த வடிகால் வாய்க்காலை காணவில்லை. எனவே மழைக் காலத்துக்குள் தூர்ந்து போன வாய்க்கால்களை உடனடியாக தூர்வார உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.