districts

மன்னார்குடி உழவர் சந்தை பேருந்து நிலையம் அருகிலேயே செயல்படும் கூடுதல் விரிவாக்கத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும்: வேளாண் வணிகத்துறை தகவல்

நீடாமங்கலம், மே 14 - மன்னார்குடி உழவர் சந்தை பேருந்து  நிலையம் அருகிலேயே தொடர்ந்து செயல்படும் என திருவாரூர் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண்  வணிகத்துறையின் துணை இயக்கு நரகம் தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி ஆகி யோர் நீடாமங்கலத்தில் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது: மன்னார்குடி பேருந்து நிலைய  விரிவாக்கத்தின் போது உழவர் சந்தையை இடமாற்றம் செய்யவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியானது. தமிழ்நாட்டின் 179 உழவர் சந்தைகளில் மிகச்சிறந்த முதல் ஐந்து உழவர் சந்தைகளில் ஒன்றாக மன்னார்குடி உழவர் சந்தை இருக்கிறது. இதனால் அதன் தகுதி நிலையை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.  இதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் சார்பாக கடந்த 29.4. 2022 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சி யரை நேரில் சந்தித்து மன்னார்குடி பேருந்து நிலையம் அருகிலேயே உழவர்  சந்தை இயங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட துறையினரின் கருத்து பெற்று, தகுந்த நடவடிக்கையை எடுப்ப தாக அப்போது மாவட்ட  ஆட்சியர் உறுதி யளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக மே 12 அன்று  வேளாண் வணிகத் துறையின் திருவா ரூர் மாவட்ட துணை இயக்குனரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், “உழவர் சந்தையை இட மாற்றம் செய்யும் உத்தரவு எதுவும் அரசி டமிருந்து வரவில்லை; தொடர்ந்து அதே இடத்தில் மன்னார்குடி உழவர் சந்தை இயங்கும்; உழவர் சந்தை விரி வாக்கம், குளிர்பதன கிடங்கு, கழி வறை உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட வசதிகளுக்கான கருத்துரு சென்னை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனருக்கு அனுப் பப்பட்டு அனுமதி கிடைத்தவுடன் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.  எனினும் இது சம்பந்தமாக தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட குழு தொடர்ந்து நிலைமையை  ஆய்வு செய்ய முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.