districts

உரங்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை

திருச்சிராப்பள்ளி, அக்.17 - திருச்சி மாவட்டத்தில் உரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாக கிடைத்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்  உத்தரவிட்டார். இதையடுத்து வட்டாட்சியர்கள், வேளாண் உதவி இயக்கு னர்கள் கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் மணப்பாறை, வையம்பட்டி வட்டாரங்களில் உள்ள 11 உரக்கடைகள், கிடங்குகள் மற்றும் உரக்கடை உரி மையாளர்களின் வீடுகளில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். ஆய்வில் வையம்பட்டியில் உள்ள ஒரு உரக்கடையில் 450 கிலோ அம்மோனியம் சல்பேட் உரம், இருப்பிற்கு அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டது. அந்த  உரக்கடை உரிமையாளர் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை யின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பது  தொடர்பான புகார்களை  கட்டணமில்லா எண் 93429  12122-ல் தெரிவிக்கலாம். உரங்களை பதுக்கி வைத்து அதிக  விலைக்கு விற்கும் உரக்கடை மற்றும் உரிமையாளர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரதீப்குமார்  எச்சரித்துள்ளார்.