மயிலாடுதுறை, ஏப்.22 - மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில் பரசலூர் கிராமத்தை சேர்ந்த இரு சகோதரிகள் கராத்தே போட்டியில் சாதனை படைத்துள்ளனர். பரசலூர் கிராமத்தை சேர்ந்த வாணிஸ்ரீ- ஜனார்த்த னன் தம்பதியரின் மகள்க ளான ச.வா.செந்தமிழினியா (8), ச.வா.தமிழோவியா (5) என்ற இரு சகோதரிகளும் ஏப்.10 அன்று ரியோகோ சிட்டோ ரியோ கராத்தே டோ, திருச்சி நேஷனல் கல்லூரி யில் நடத்திய மாநில அளவி லான கராத்தே போட்டியில், ஹிட்டோசி சிட்டோ ரியோ கராத்தே டோ இந்தியா, பள்ளி சார்பில் கலந்து கொண்டனர். இதில் கத்தா மற்றும் குமித்தே இரண்டு பிரிவு களில், ச.வா.செந்தமி ழினியா 2 தங்க பதக்கங்களை யும், இவரின் சகோதரி ச.வா.தமிழோவியா கத்தா பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டு களில் மூன்று மாநில அளவி லான கராத்தே போட்டிகளில் பங்கேற்று அனைத்திலும் தங்க பதக்கங்களை வென்று வருகிற ச.வா.செந்தமிழி னியாவை போல தற்போது அவரின் சகோதரியும் பதக்க கணக்கை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற இந்த மழலை சகோ தரிகளையும் பயிற்சியாள ரையும் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.