முதுகுளத்தூர், பிப்.3- இராமநாதபுரம் மாவட் டம் முதுகுளத்தூர் ஶ்ரீகண்ணா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி மாணவி எஸ்.நித்திலா மயிலாடு துறையில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாநில அள விலான 14 வயதுக்கு உட் பட்டோர் பிரிவு குத்துச் சண்டை போட்டியில் வெண் கல பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவிக்கு டைகர் பாக்சிங் இன்ஸ்டியூட் குத்துச்சண்டை பயிற்சி யாளர் பாஸ்கரன், அணி மேலாளர் இயேசு ராஜா, பள்ளி தாளாளர் வழக்கறி ஞர் சந்திரசேகரன், பள்ளி நிறுவனர் காந்தி ராஜ், பள்ளி முதல்வர் அட்லின் லீமா மற் றம் பள்ளி ஆசிரியர் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.