திருச்சிராப்பள்ளி, பிப்.3 - திருச்சி மாவட்டத்தில் மணல் மாட்டு வண்டி குவாரிகளை திறந்து ஆயிரக் கணக்கான மனிதர்களையும், மாடுகளை யும் பட்டினியில் இருந்து பாதுகாக்க வலி யுறுத்தி சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழி லாளர் சங்கம் சார்பில் திங்களன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இதற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மணல் மாட்டு வண்டி தொழிலா ளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சேகர், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் சந்திரசேகரன், சிஐடியு புறநகர் மாவட்ட நிர்வாகி கனகராஜ் ஆகியோர் பேசி னர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆடிஓ-விடம் கொடுத்த மனு வில், “திருச்சி மாவட்டத்தில் மணல் மாட்டு வண்டி குவாரிகளை மூடி 18 மாதங்கள் ஆகிறது. இதனால் ஆயிரக்கணக்கில் மாடு களும், மனிதர்களும் பட்டினி கிடக்கும் அவலம் மற்றும் மணல் மாட்டுவண்டி தொழி லாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் வறுமையில் தவிக்கின்றனர். தஞ்சை மாவட் டத்தில் மணல் மாட்டுவண்டி குவாரிகள் திறப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுப்பதாக அறிகிறோம். ஆகவே திருச்சி யில் உள்ள மாதவப்பெருமாள் கோவில், தாளக்குடி மணல் மாட்டுவண்டி குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுத்து, மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டும்” என கூறியிருந்தனர்.