தஞ்சாவூர், பிப்.3 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் ஊராட்சி, வெளிமடம் கிரா மத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க புதிய கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. கிளை அமைப்புக்கு சு.ராஜாக்கண்ணு தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இதில் கிளைத் தலைவராக சு.ராஜாக்கண்ணு, செயலாளராக ரா.அகில்ராம், பொருளாளராக பி.இளங்கோ, நிர்வாகிகளாக பழநியாண்டி, மதியழகன், நாடிமுத்து, மதன்குமார் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். நாடியம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ரா மன் குளம் (சர்வே எண்:219,140) மற்றும் ஆண்டிக்குளம் (சர்வே எண்:226/1) ஆகிய இரண்டு குளங்களிலும் பாசனத்திற்கு முற்றி லும் தண்ணீர் வராமல் உள்ளது. நெடுஞ் சாலைத் துறை விரிவாக்கம் என்ற பெயரில் முற்றிலும் வாய்க்கால் அடைக்கப்பட்டுள்ளது. பாசன வாய்க்கால்களை மீட்டு கடந்த இரண் டாண்டுகளாக குளங்களில் தண்ணீர் சிறை வைக்கப்பட்டதால், 100 ஏக்கர் பாசனப் பரப்பு முற்றிலும் முடங்கி விவசாயம் செய்ய முடியா மல் விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர். கடந்த இரண்டாண்டுகளாக விவசாயம் செய்ய முடியாததால், எந்தவித வருமானமும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு என்ன செய் வது என தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, காணாமல் போன வாய்க்கால் களை மீட்டுத் தர வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்யாமல் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதுகுறித்து, மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை எழுப்புவது என முடிவு செய்யப்பட்டது.