districts

img

வேப்ப மரங்கள் தற்காத்துக் கொள்ளவே வெள்ளை நிற திரவத்தை வெளியேற்றும் தாவரவியல் பேராசிரியர் விளக்கம்

விருதுநகர், பிப்.3- விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்  வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதாக வதந்தி பரவியது. இதனால், ஏராளமானோர் அங்கு  குவிந்தனர். இந்நிலையில், வேப்ப மரங்கள் தற்காப்பு நடவடிக்கையாக வெள்ளை நிற திரவத்தை சுரக்கும் என தாவரவியல் பேராசிரியர் விளக்கம் அளித்துள்ளார். விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில் பழமையான ரெங்கநாதர் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில் வேப்ப  மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன.   இந்நிலையில், வேப்பமரம் ஒன்றில் வெள்ளை நிற  திரவம் வெளியானது. இதைக் கண்ட பக்தர் ஒருவர், மரத்திலிருந்து பால் வடிவதாக தெரிவித்தார். இதை யடுத்து, கோவிலுக்கு வந்த பக்தர்கள் அங்கு கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். சிலர் அதை, தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இதுகுறித்து, தாவரவியல் பேராசிரியர் மேகலிங்கம் கூறுகையில், “வேப்ப மரங்களிலிருந்து (அசாடிராக்டா இண்டிகா) காணப்படும் வெண்மையான திரவமானது, அசுவினி, வெள்ளை ஈக்கள் மற்றும் மாவுப்பூச்சிகள் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளால் அடிக்கடி தாக்கு தலுடன் தொடர்புடையது. இந்த பூச்சிகள் புளோயத்தை ஆக்கிரமித்து, மரத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக பால் போன்ற திரவம் வெளியேறலாம்.  இது குடேஷன் திரவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திரவத்தில் அசாடிராக்டின் போன்ற தற்காப்பு கலவை கள் இருக்கலாம். இது பூச்சிகளைக் கொல்லும். வெள்ளை  திரவத்தின் பிற காரணங்களில் பூஞ்சை தொற்று அல்லது  சுற்றுச்சூழல் காரணிகள் அடங்கும். மேலும், வேப்ப  மரம் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட மரம் என்ப தில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் வேப்ப  மரத்தில் பால் வடிவதற்கும் ஆன்மீகத் திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என திட்டவட்டமாக தெரிவித்தார்.