மயிலாடுதுறை, மே 12- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரியின் முதல்வர் வீரா.காமராசன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் அருட்சகோதரி கருணா ஜோசபாத் வாழ்த்துரை வழங்கினார். மயிலாடுதுறை மாவட்ட தலைமைக் காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ஐபிஎஸ் கலந்து கொண்டு விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கணிதத் துறை தலைவர் பேராசிரியர் ஆனந்த் ஞானசெல்வம் வரவேற்றார். கணினி அறிவியல் துறை பேராசிரியர் ஃப்ளாரன்ஸ் நன்றி கூறினார்.