இராமநாதபுரம், மார்ச் 23- இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மக்கள் சட்ட உரி மைகள் கழகம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இராம நாதபுரம் பாரதிநகரில் கிழக்கு மாவட்ட செயலா ளர் செந்தில்குமார் தலைமை யில் நடந்தது. சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் கண்ணன், அரசு ஊழியர் அணி மாநில துணை செய லாளர் மகாதேவன், பேரிடர் மீட்பு அணி மாநில துணை செயலாளர் சாமி அய்யா, மாவட்ட துணை செயலாளர் ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வை புகாரியா பள்ளிவாசல் அல்ஹாஜ் அக்பர் ஆலிம் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தி னர்களாக இராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி, மதி முக மாவட்ட செயலாளர் வி.கே.சுரேஷ், இராமநாத புரம் வட்டார வளர்ச்சி அலு வலர் செந்தாமரை செல்வி, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி துணை அலுவலர் விஜயகுமார், சாத்தான் குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் சர்மிளா பர்வீன், மின்வாரிய உதவி செயற் பொறியாளர் சோமசுந்தரம், உச்சிப்புளி ஜெயகாந்தன், சாத்தான்குளம், வாலாந் தரவை ஜமாஅத் நிர்வாகி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மக்கள் சட்ட உரிமைகள் கழக மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர் வரவேற்றனர். மண்டபம் ஒன்றிய துணை செயலாளர் ஹிதா யத்துல்லா நன்றி கூறினார்.