districts

img

சித்தா, பல் மருத்துவக் கல்லூரிக்கான ஆயத்த வேலைகள் நடைபெறுகிறது அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 24 - திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு திறப்பு விழா  மாவட்ட சித்த மருத்துவர் காமராஜ் தலைமை யில் நடைபெற்றது.  புதிய சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவை  அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து  கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி  பெட்டகம் வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசுகையில், “திருச்சி யில் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் பல்  மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வரு கின்றன. விரைவில் கல்லூரிகள் தொடங்கப் படும். திருச்சி பெட்டவாய்த்தலையை மாநக ராட்சியுடன் இணைக்கும் தரம் உயர்த்தக் கூடிய அனைத்து பணிகளையும் செய்து வரு கிறோம்” என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட  ஆட்சியர் பிரதீப்குமார் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.