districts

செப்.15 அறிஞர் அண்ணா பிறந்த நாள்: மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

திருச்சிராப்பள்ளி, செப்.8 - தமிழக முன்னாள் முதல மைச்சர் அறிஞர் அண்ணா  பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் செப்.15 ஆம்  தேதி காலை 6.30 மணிக்கு  மாணவ, மாணவியர்களுக் கான சைக்கிள் போட்டிகள் திருச்சி அண்ணா விளை யாட்டரங்கில் நடக்கிறது. 13, 15, 17 ஆகிய வயதிற்குட் பட்ட மாணவ, மாணவி களுக்கு 3 பிரிவுகளாக நடத்தப்படும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் சொந்த செல வில் சைக்கிள் கொண்டு வர வேண்டும். சாதாரண சைக்கி ளாக இருக்க வேண்டும். முதல் 10 இடங்களில் வெற்றி  பெறும் மாணவ, மாணவி களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்படும். மாணவ, மாணவிகள் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் னரே அண்ணா விளை யாட்டரங்கத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கை யொப்பமிட்ட வயது சான்றித ழுடன் வர வேண்டும். வயது சான்றிதழ் இல்லாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள  அனுமதிக்கப்பட மாட்டார் கள்.  மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளை யாட்டரங்கம் - திருச்சி என்ற  அலுவலகத்தை தொடர்பு  கொள்ளலாம் என திருச்சி  மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.