districts

img

மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்

திருச்சிராப்பள்ளி, பிப்.22-  தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் 2 ஆம் ஆண்டு பேரவை மற்றும் தோழர். பாலனந்தன் நூற்றாண்டு நினைவு கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா திருச்சியில் சனிக்கிழமை நடந்தது.  விழாவிற்கு தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் துணைத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை நாகராசு வாசித்தார். வேலை அறிக்கையை வட்டச் செயலாளர் இருதயராஜ் வாசித்தார்.  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். சங்க மாநில பொருளாளர் ஆதன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டச் செயலாளர் பழனியாண்டி, வட்டத் தலைவர் நடராஜன், வட்டத் துணைத்தலைவர் செல்வராஜ், பெற்றோர் நல அமைப்பு பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  மின் விநியோகத்தை தனியார் மயமாக்கும் தனியார் வாடகை டோடெக்ஸ் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். மின் கணக்கீட்டு பணி, மின் இணைப்புகளை துண்டிப்பு செய்வது, மறு இணைப்பு செய்யும் பணி, மின் கணக்கீடு பிரச்சனைகளை சரி செய்தல், புதிய மின் இணைப்பு வழங்குதல், மின் இணைப்பில் கூடுதல் பளு சேர்த்தல் உள்ளிட்ட அனைத்து மின் நுகர்வோர் தொடர்புகளும் தனியாரிடம் ஒப்படைக்கும் ஸ்மார்ட் மீட்டர் டோடெக்ஸ் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் திட்டத் தலைவராக எம். இருதயராஜ், திட்டச் செயலாளராக பி. சுரேஷ், திட்டப் பொருளாளராக எஸ். நாகராசு, துணைத் தலைவர்களாக ஆர். நாராயணசாமி, எம். செல்வம், எஸ். ஆரோக்கியசெல்வம், ஷேக் முகமது, கார்த்திக், துணைச் செயலாளர்களாக எஸ். அருண்மொழி, பி.கயல்விழி, ஜெ. ஹேமப்பிரியா, டி. இந்துமதி, மரிய சேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் மாநில பொதுச் செயலாளர் அருள்செல்வன் நிறைவுரையாற்றினார். வட்டத் துணைத் தலைவர் அருண்மொழி நன்றி கூறினார். முன்னதாக, தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், தோழர். பாலானந்தன் நினைவு கொடியை ஏற்றினார்.  தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் மாநிலப் பொதுச் செயலாளர் அருள் செல்வன் கல்வெட்டை திறந்து வைத்தார்.