districts

ஓ.என்.ஜி.சி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மன்னார்குடி, ஏப்.1 - திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பில் மக்கள் பயன் பாட்டுக்கான நலத்திட்டங் கள் கொண்டு வரப்பட்டன. கொரடாச்சேரி அருகே கமலாபுரம் ஊராட்சியில் 3 உயர்கோபுர விளக்குகள், பெருமாளகரம் ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மினி டேங்குடன் கூடிய 3 ஆழ்த்துளை கிணறு கள் மற்றும் அடிபம்பு போன்றவற்றை கொரடாச் சேரி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசந்தர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி. குழும பொது மேலா ளர் மாறன், ஊராட்சி தலை வர்கள் பானுப்பிரியா பாலாஜி (பெருமாளகரம்), பிரபாவதி அமர்நாத் (கமலா புரம்), ஓ.என்.ஜி.சி சமூக  பொறுப்புணர்வு அதிகாரி கள், ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதேபோல் செட்டிச் சிமிழி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளிக்கு கணினி  மற்றும் பள்ளிக்கு தேவை யான பீரோ, நாற்காலிகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமையாசிரியர் தேவிகா  முன்னிலையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர் கூட்டணி சங்க மாநிலத்  தலைவர் ரவி  பொருள்களை வழங்கினார். திருவாரூர் சரகம் வைப்பூர் காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம் ஆகியவற்றில் பொதுமக்கள் பயன்பாட்டிற் காக தளம் மற்றும் மேற்புறக் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதை குழும பொது மேலா ளர் மாறன் திறந்து வைத்தார்.