districts

img

சிபிஎம், வாலிபர் சங்கம், தமுஎகச சார்பில் பொங்கல் விளையாட்டு விழா

புதுக்கோட்டை, ஜன.15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை காந்தி நகரில் பொங்கல் விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காந்தி நகர் கிளைச் செயலாளர் வழக்கறிஞர் கு. ஜெகன் தலைமை வகித்தார். போட்டி களைத் தொடங்கி வைத்தும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தும் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர்  சிறப்புரையாற்றினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சு.மதியழகன், ஜி.நாக ராஜன், டி.சலோமி, மாநகரச் செயலா ளர் புதுகை எஸ்.பாண்டியன், மாவட்டக்  குழு உறுப்பினர் எஸ்.பாண்டிச் செல்வி, வாலிபர் சங்க நகரத் தலைவர்  முரளி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினர். சிபிஎம் நகரக்  குழு உறுப்பினர்கள் ஆர்.சோலை யப்பன், நித்தீஷ் மற்றும் கிளைத் தோ ழர்கள் தனபால், தீக்கதிர் செல்வம், பிச்சைமுத்து, கணேசன் மற்றும் அப்பகுதி மக்கள் பங்கேற்றனர். தமுஎகச நடத்திய விளையாட்டு விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக் கோட்டை மரபுக்கிளை சார்பில் பொங்கல் விளையாட்டு விழா புதன் கிழமை புதுக்கோட்டையில் நடை பெற்றது. விழாவிற்கு புதுக்கோட்டை மரபுக் கிளைத் தலைவர் எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார். போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு, மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், புதுக் கோட்டை தமிழ்ச்சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி ஆகியோர் பய னாடை அணிவித்து பாராட்டினர். புதுக் கோட்டை மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.