திருச்சிராப்பள்ளி, ஜூலை 4 - திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா பர்மா காலனி, திடீர் நகர், காவேரி நகர் பகுதிகளில் குடியிருக்கும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மக்கள் நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நடராஜன், கே.சி. பாண்டியன், லெனின், தங்கதுரை தலைமை யில் திங்களன்று ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு கொடுத்த னர். அந்த மனுவில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா கூத்தைப்பார் கிரா மம் புல எண் 340/1, 341, 342 மற்றும் திரு வெறும்பூர் கிராமம் புல எண்கள் 180/3, 181, 182, பர்மா காலனி திடீர் நகர், காவேரி நகர் பகுதிகளில் கடந்த 60 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு குடி மனைப் பட்டா வழங்க வேண்டும். 1927 எஸ்எல்ஆர் ஆவணப்படி பதிவாகி உள்ள பட்டாதாரர்கள் இடத்தினை, 1987 யுடிஆர் ஆவணத்தில் தவறாக உள்ள ரயில்வே டிபார்ட்மெண்ட் பதிவினை நீக்கி மேற்படி நிலத்தில் எவ்வித இடையூறுமின்றி வாழ்ந்து வருகிறோம். நாங்கள் வீட்டு வரி, குடிநீர் வரி, மின்சா ரக் கட்டணம் செலுத்தி வருகிறோம். மேற்படி இடங்கள் தமிழக அரசின் வருவாய்த் துறைக்கு சொந்தம் என்பதாலும், 20 ஆண்டு களுக்கு மேலாக மேற்படி இடத்தில் தொ டர்ந்து இடையூறு இன்றி வசித்து வருகிற காரணத்தினால், அனுபோகபாத்தியதை ஏற்பட்டு மேற்படி இடம் சொந்தமாகி விட்டது. மேற்படி புல எண்கள் இடத்தில் குடி யிருந்து வரும் எங்கள் குடும்பத்திற்கு குடி மனைப் பட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்திருந்த னர்.