தஞ்சாவூர், பிப்.22- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கரிசவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில், இரண்டு தளங்களுடன் கூடிய 6 புதிய வகுப்பறை கட்டிடங்கள், அறிவியல் ஆய்வகம், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை ரூபாய் 2 கோடியே 44 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதனை, தமிழக முதல்வர் சனிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் குத்துவிளக்கேற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.