districts

கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் உறுதி வாலிபர் சங்கத்தின் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

குடவாசல், அக்.7 -  வாலிபர் சங்கத்தினர் நடத்தவிருந்த காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், சுரைக்கா யூர் ஊராட்சியில் பட்டா இல்லாத அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். நாட்டாறு ஆற்றங்கரையில் படித்துறை கட்ட வேண்டும். சமுதாயம் கூடம் அமைக்க வேண்டும். பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீர்  செய்ய வேண்டும். அங்கன் வாடி கட்டிடத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்திட வேண்டும். தரம் இல்லா மல் கட்டப்பட்ட கழி வறையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின்  சார்பில் குடவாசல் வட்டாட்சி யர் அலுவலகத்தில் காத்தி ருப்பு போராட்டம் நடைபெ றும் என அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில் குடவாசல்  வட்டாட்சியர் குருநாதன் சமாதானக் கூட்டத்திற்கு அழைத்தார். அதில்,  அனைத்து கோரிக்கை களையும் நிறைவேற்றுவ தாக வட்டாட்சியர் குரு நாதன் மற்றும் துறை சார்ந்த  அலுவலர்கள் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்த னர். இதனால் காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சலாவுதீன், தலைவர் ஏ.கே.வேலவன் மற்றும் எர வாஞ்சேரி பகுதி குழு தலை வர் ஆர்.மாரிமுத்து, மாவட்ட  நிர்வாகிகள் கேசவராஜ், பா.விஜய், எஸ்.ஜெய்கிஷ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.