districts

இராமநாதபுரத்தில் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்க!

இராமநாதபுரம், பிப்.3- இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி  வறட்சியான பகுதி. எனவே விவசாயி களுக்கும் பொதுமக்களுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் அனைத்து நீர் நிலை களையும் தூர்வாரி வைகை ஆற்று தண்ணீர்  சென்றடைவதற்கு வழிவகை செய்யும் வகையில் சிறப்பு திட்டத்தினை ஒன்றிய அரசு அறிவித்திட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.  காற்றாற்று வெள்ளம் வரக்கூடிய வரத்து கால்வாய்களில் மழைநீர் சேக ரிப்பு ரீசார்ஜ் போர்வெல் உருவாக்கி நிலத்தடி நீரை உயர்த்துவதற்கும், இராம நாதபுரம் நாடாளுமன்ற தொகுதி முழு வதும் அனைத்து கிராமங்களிலும், நகரங்க ளிலும், தெருக்களிலும் ரீசார்ஜ் போர்வெல்  உருவாக்கி அதன் மூலம் நிலத்தடி நீரை  மேம்படுத்தி குடிப்பதற்கு சுத்தமான குடி தண்ணீர் கிடைக்கும் வகையில் திட்டங் களை செயல்படுத்த சிறப்பு திட்டத்தினை ஒன்றிய அரசு அறிவித்திட வேண்டுமென எனவும் கேட்டுக்கொண்டார்.