திருச்சிராப்பள்ளி, ஆக.19 - திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள சிறப்பு சுகாதார முகாமான ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் அனைத்துத் துறை தலைமை அலுவ லர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், ஆக.20 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆக.27 முதல் செப்.2 வரை திட, திரவக் கழிவு மேலாண்மை தொடர்பாக அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர் களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும். செப்.3 முதல் செப்.16 வரை அனைத்து வீடுகளிலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். செப்.17 முதல் செப்.23 வரை ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழியை தடை செய்வது தொடர்பான நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். செப். 24 ஆம் தேதி முதல் அக்.1 ஆம் தேதி வரை பசுமைக் கிராமம் மற்றும் முழு சுகா தார கிராமமாக மாற்ற நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும். இப்பணி களில் அனைத்து அரசு அலுவலர்களும் முழு அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பு முகாமினை வெற்றிகர மாக செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.