விருதுநகர், மார்ச் 23- விருதுநகர் மண்டலத்தில் 13 புதிய பேருந்துகளின் சேவைகளை பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். விருதுநகர் பழைய பேருந்து நிலை யத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் புதியதாக பெறப்பட்ட 13 புதிய பேருந்து கள் சேவையை மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் தலைமையில், சட்டமன்ற உறுப்பி னர்கள் சீனிவாசன்( விருதுநகர்), ஜி.அசோ கன்( சிவகாசி), ரகுராமன்( சாத்தூர்), சிவ காசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், மதுரை கோட்ட மேலா ண்மை இயக்குநர் ஆர்.சிங்காரவேலு, விருதுநகர் மண்டல பொது மேலாளர் எஸ். துரைச்சாமி, செய்தி மக்கள் தொடர் புத்துறை உதவி இயக்குநர் ச.தங்கவேல், நகர்மன்ற தலைவர் மாதவன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.