districts

img

ஒன்றிய அரசிற்கு எதிராக காப்பீட்டு ஊழியர்கள் ஆவேசம்

கோவை, பிப்.4- காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டின் அளவை 74 விழுக்காட்டிலிருந்த நூறு சதவிகித மாக உயர்த்தி ஒன்றிய அரசு பட்ஜெட்டில் அறி வித்துள்ளது. மக்கள் சேமிப்பை சூறையாடும் ஒன் றிய பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பொதுத்துறையை சீரழிக் கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடு முழு வதும் எல்ஐசி ஊழியர்கள் செவ்வாயன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன்தொடர்ச்சியாக, அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில், கோவை கோட் டத்திற்குட்பட்ட அனைத்து கிளைகளிலும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கோவை திருச்சிசாலை யில் உள்ள கோட்ட அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோட்ட பொதுச் செய லாளர் கே.துளசிதரன் துவக்க உரையாற்றினார். இதில், அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் எம்.கிரிஜா, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் இணைச்செயலாளர் வி.சுரேஷ் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில், கோட்டப் பொருளாளர் பி.சாமிநாதன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.  ஈரோடு ஈரோடு எல்ஐசி அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். இதில், ஏராளமான எல்ஐசி  ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், முரு கானந்தம் நன்றி கூறினார். சேலம் சேலம் எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், எல்ஐசி ஊழியர் சங்க கோட்ட பொதுச்செயலாளர் ஆனந்த், தலைவர் நரசிம்மன், இணைச்செயலாளர்கள் கணேச  பாண்டியன், சந்திர மெளலி, துணைத்தலைவர் கள் மாதேஸ்வரன், ஹரிணி, பொருளாளர் ஞான வேல், உதவிப் பொருளாளர் அரவிந்தன் உட்பட  பலர் கலந்து கொண்டனர். சேலம் கோட்டத்திற்குட் பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தரும புரி மாவட்டங்களில் 20 மையங்களிலும் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. இதில் காப்பீட்டு கழக ஊழி யர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.