அக்னிபாத் என்ற பெயரில் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடசென்னை திருவெற்றியூர் எர்ணாவூர் பகுதி சார்பில் கிளைச் செயலாளர் விவேக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் சரவண தமிழன், நிர்வாகிகள் ராஜ்குமார், ஸ்டாலின், அபிலாஷ், இக்பால், கவுசிக், கலையரசன் ஆகியோர் பேசினர்.