மயிலாடுதுறை, ஜூலை 21- மயிலாடுதுறை மாவட் டத்தில் தற்போது நடப்பட்ட குறுவை பயிர்களில் பூச்சி தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், உரங்களை தட் டுப்பாடின்றி வழங்க வேண்டு மென தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. நடப்பு குறுவை சாகுபடி நெற்பயிர்களில் குருத்துப் பூச்சி மற்றும் இலை சுருட்டு பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதால் மகசூல் குறைந்து போகும் நிலை ஏற்படும். இத னால் பெரும்பாலான விவ சாயிகள் கவலையோடு பூச் சிக்கொல்லி மருந்து தெளிக் கும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். மயிலாடுதுறை மாவட் டத்தில் நடப்பாண்டு 96 ஆயி ரம் ஏக்கரில் குறுவை சாகு படி செய்ய இலக்கு நிர்ண யிக்கப்பட்டு உள்ளது. மயி லாடுதுறை, குத்தாலம், தரங் கம்பாடி, சீர்காழி ஆகிய வட்டங்களில் விவசாயிகள் பம்புசெட் மற்றும் ஆற்று நீர் பாசனத்தை கொண்டும் குறுவை சாகுபடி பணியில் முனைப்பு காட்டி வருகின்ற னர். நடவுப் பணிகள் முடிவ டைந்து கதிர் பிடிக்கும் நிலை யில் உள்ள பயிர்களில் தற் போது குருத்துப்பூச்சி, இலைச் சுருட்டு பூச்சி, நாற்றங்கால் பூச்சி, பச்சை பூச்சி தாக்கு தல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் மஞ் சள் நிறமாக மாறி நுனி சுருண்டு வாடிவிடுகிறது. இந்த பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தினை தண்ணீரில் கலந்து ஸ்பிரே யர் மூலம் வயல்களில் தெளிக்கும் பணியில் ஈடு பட்டுள்ளனர். இந்த பூச்சி தாக்குதலால் மகசூல் குறை யும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். துரைராஜ் கூறும் போது, மயிலாடுதுறை மாவட் டத்தில் உரத்தட்டுப்பாடு உள் ளதாகவும் அரசு மானியத் தில் வழங்கக் கூடிய யூரியா, பொட்டாஷ் போன்ற உரங் களை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விரை வில் வழங்க வேண்டும் என் றும் கோரிக்கை விடுத்துள்ளார்.