திருச்சிராப்பள்ளி, பிப்.8 - திருச்சி மாநகராட்சி தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 35 ஆவது வார்டில் போட்டி யிடும் சுரேஷ், திமுக சார்பில் 16 ஆவது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் மதி வாணன் ஆகியோரை அறிமுகப்படுத் தும் கூட்டம், செயல் வீரர்கள் கூட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி யின் அரியமங்கலம் கிளை சார்பில் திங்களன்று நடைபெற்றது. அரியமங்கலம் தெற்கு உக்கடம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தமுமுக, மமக மாவட்ட தலைவர் முக மது ராஜா தலைமை வகித்தார். தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் அசரப் அலி மற்றும் மமக மாவட்ட இளைஞரணி செயலாளர் உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் வேட்பா ளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயபால், ரேணுகா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, கனல் கண்ணன் மற்றும் கூட்டணி கட்சியி னர் கலந்து கொண்டனர்.