மதுரை, பிப்.18- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதுரை மாநகராட்சி 96 வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என்.விஜயா, காங்கிரஸ் கட்சி சார்பில் 94 வது வார்டு வேட்பாளர் சுவேதா சத்யன், திமுக சார்பில் 95 வார்டு வேட்பாளர் இந்திராகாந்தி, 97வது வார்டு வேட்பாளர் சிவசக்தி ரமேஷ், 98வது வார்டு வேட்பாளர் சுவிதா விமல், 99வது வார்டு வேட்பாளர் உசிலை சிவா ஆகிய கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதர வாக சு.வெங்கடேசன் எம்.பி,, மாணிக்கம் தாகூர் எம்.பி., ஆகியோர் வியாழனன்று பிரச்சாரம் மேற்கொண்டனர். திருநகர் மகாலெட்சுமி காலனியில் இருந்து இருசக்கர வாகனம் அணி வகுப்பு பேரணியாக பிரச்சாரத்தினை துவங்கி திருநகர் 1,2,3,4 ஆகிய பேருந்து நிறுத்தம், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம் 16கால் மண்டபம், ராஜிவ்காந்தி நகர் பகுதி, திருப்ப ரங்குன்றம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தள பதி ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநி லக் குழு உறுப்பினர் சி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பா.ரவி, எஸ்.கார்த்திக், மாவட்டக் குழு உறுப்பினர் வி.முத்துராஜ், திருப்ப ரங்குன்றம் தாலுகாச் செயலாளர் எம்.ஜெயகுமார், திமுக சார்பில் மாரியப்பன், இளங்குமரன், செந்தில் கிருஷ்ணபாண்டியன், காங்கிரஸ் சார்பில் மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.வி.மகேந்திரன், மாவட்டத் தலைவர் பாண்டியன், ஒபிசி மாவட்டத் தலைவர் சரவணபவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதுரை 21-ஆவது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியில் திமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆத ரித்து பிரச்சாரத்தை துவக்கிய சு. வெங்கடேசன் எம்.பி., 22-ஆவது வார்டு மகாலட்சுமி, 23-ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் குமரவேல், 27-ஆவது வார்டு வேட்பாளர் கருப்பு ராஜா ஆகியோரை ஆத ரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து திமுக வேட்பாளர்கள் 25-ஆவது வார்டு முரளி, 28-ஆவது வார்டு உமாரவி, 29-ஆவது வார்டு லோகமணி ரஞ்சித், 34-ஆவது வார்டு பாண்டிஸ்வரி ஜெகநாதன், 35-ஆவது வார்டு ஜானகி சுரேஷ், 37-ஆவது வார்டு பொன்வளவன் (எ) ராஜா, 39-ஆவது மார்நாடு, விசிக 30-ஆவது வார்டு மோகனா, காங்கிரஸ் 36-ஆவது வார்டு கார்திகேயன் ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், பகுதி குழு செயலாளர்கள் வடக்கு - 1 வி. கோட்டைச்சாமி, வடக்கு - 2 ஏ.பாலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ராதா, என்.ஜெயசந்திரன், கே.அலாவுதீன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் க.திலகர், பா. பழனியம்மாள், திமுக வட்டச் செயலாளர் பவுன்ராஜ், பகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன், மதிமுக வட்டச் செயலாளர் பரமன் மற்றும் திமுக, சிபிஐ, மதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகி கள் கலந்துகொண்டனர்.