districts

img

திருவாரூர் - நாகை மாவட்டத்தை புறக்கணிக்கும் தென்னக ரயில்வே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ரயில் மறியல் போராட்டம்

திருவாரூர், நவ.28-  தென்னக ரயில்வே திருவாரூர் -நாகப்பட்டினம் மாவட்டங்களை தொடர்ந்து புறக்கணிப்பதை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்  டணி கட்சிகளின் சார்பில் திருவாரூர்  மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி, பேரளம், முத்துப்பேட்டை ஆகிய ரயில் பாதைகளில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் கொர டாச்சேரி ஒன்றியத்தில் உள்ள கிளரி யம் ரயில்வே கேட் அருகே உள்ள ரயில் பாதையில் நடைபெற்ற மறி யல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் தலைமை வகித்தார். திமுக சட்ட மன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான பூண்டி கலை வாணன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி, சிபிஐ மாவட்  டச் செயலாளர் வை.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.கலியபெரு மாள், பி.கந்தசாமி, டி.முருகையன்  மற்றும் கூட்டணி கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மன்  னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், வலங்கைமான், குடவாசல் ஒன் றிய பகுதியிலிருந்து 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காலையில் துவங்கிய ரயில் மறியல் போராட்டத்தினால் மயி லாடுதுறை பயணிகள் ரயில் மற்  றும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் உள் ளிட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டது. இதனால், முற்றிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கொட்டும் மழை யிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
பேரளம்
நன்னிலம் ஒன்றியம் பேரளம் ரயில் நிலையம் அருகே உள்ள சன்னாநல்லூர் ரயில் பாதையில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.உலகநாதன், விசிக மாவட்டச் செயலாளர் மா. வடிவழகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  இதில் சிபிஎம் மாவட்டச் செயற்  குழு உறுப்பினர் எம்.சேகர், கே.ஜி. ரகுராமன், பி.கோமதி, நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்  கம், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர்கள் (தெற்கு), டி.வி.காரல் மார்க்ஸ் (வடக்கு), வி.டி. கதிரேசன், மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சியின் மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் உட்பட  2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர். முத்துப்பேட்டையில் நடை பெற்ற ரயில் மறியல் போராட்டத் திற்கு சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் கா.மாரிமுத்து தலைமை ஏற்றார். சிபிஐ, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, முத்துப் பேட்டை ஒன்றியச் செயலாளர் கே. பழனிசாமி, நகரச் செயலாளர் பி. செல்லதுரை மற்றும் கூட்டணி கட்சி யின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகி கள் பங்கேற்றனர்.  இதனையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த தென்னக ரயில்வே மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில், நீடாமங்கலம், கொரடாச்சேரி, பேர ளம்,கீழ்வேளுர் ஆகிய ரயில் நிலை யங்களில் ரயில்கள் நின்று செல்ல  நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர்  மேலும், முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை மேம்படுத் திய பின்னர் முத்துப்பேட்டையில் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த னர். ஒன்றிய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் டெல்டா வில் ரயில் சேவை குறித்த 32 கோரிக்  கைகளும் பேசப்பட்டன.  பேச்சுவார்த்தையில் பல்வேறு  கோரிக்கைகளை நிறைவேற்றுவ தாக அதிகாரிகள் ஒப்புக்கொண் டதை அடுத்து ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
நாகப்பட்டினம் 
கீழ்வேளூர் ரயில் நிலையத்தில்  நடைபெற்ற ரயில் மறியல் போராட்  டத்தில் சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாநிலக்  குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி. நாகைமாலி, கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.என்.அபு பக்கர், சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.தங்கமணி, திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் என்.கௌத மன், விசிக மாவட்டச் செயலாளர் பா.கதிர்நிலவன், காங்கிரஸ் என்.அமிர்த ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.