districts

img

ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 23-  1.4.2003-க்குப் பிறகு   அரசுப்பணியில் சேர்ந்தோ ருக்கு தற்போது நடைமுறை ப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தினைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஞாயிறன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாநிலம் தழுவிய உண்ணாவரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன், நாகராஜன், குமாரவேல், முனைவர் பால்பாண்டி, நவநீதன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதுமான் அலி வரவேற்றார். போராட்டத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் சண்முகநாதன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பொதுச் செயலாளர் பிரகலதா நிறைவுரை ஆற்றினார். மாவட்ட நிதி காப்பாளர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.  திருவாரூர்  திருவாரூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு, ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் ஆர்.முத்துவேல், ச.சண்முகவடிவேல், ஆ.ராமலிங்கம், சு.சுதாகர்,எம்.பூபதி,முனைவர் டி.மணிமாறன் ஆகியோர் தலைமை ஏற்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வே.சோமசுந்தரம் துவக்க உரையாற்றினார.  கரூர்  கரூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பா. பெரிமசாமி, பொன் ஜெயராம், எம்.எஸ்.அன்பழகன், சு.வேலுமணி, பல.தமிழ்மணியன், வி.ஆரோக்கிய பிரேம்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் பொ. அன்பரசன் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில பொதுச் செயலாளர் மா.மு.சதீஷ் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.  புதுக்கோட்டை புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.ஜபருல்லா, எம்.ராஜாங்கம், விஎம்.கண்ணன், டி.ஜீவன்ராஜ், வி.ஜோதிமணி, ஆர்.ரெங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் க.குமரேசன், மு.மாரிமுத்து ஆகியோர் உரையாற்றினர். மாநில ஒருங்கிணைப்பாளர் அ.சங்கர் சிறப்புரையாற்றினார்.