தமிழகத்தின் அமைதியை பாதுகாப்போம், மதவாத சக்திகளை முறியடிப்போம் ஆகியவற்றை வலியுறுத்தி செவ்வாயன்று மாலை திருச்சியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடக்கிறது. இதையொட்டி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதிகளில், மனித சங்கிலி இயக்கம் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், ராமர், சிபிஐ மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, திராவிடர் கழக ஆரோக்கியராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சந்தானமொழி, மனிதநேய மக்கள் கட்சி ராஜாமுகமது, அஷ்ரப் உள்பட பலர் பங்கேற்றனர்.