மன்னார்குடி, மார்ச் 23 - மன்னார்குடி இஸ்லாமிய நண்பர்கள் சார்பில் 30 ரூபாய் கட்டணத்தில் செயல்படும் மருத்துவமனை மன்னார்குடியில் திறக்கப்பட்டுள்ளது. எம்ஐடி ஹெல்த் கேர் என அழைக்கப்படும் இம்மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். ஏழை, எளிய நடுத்தர மக்கள் நலம் பெறும் நோக்கில், ‘மன்னை இஸ்லாமிய தோழமைகள் அமைப்பு’ சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில், முதல் கட்டமாக மகப்பேறு மற்றும் பொது மருத்துவம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக 30 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. நாள்தோறும் மாலை 5 மணி முதல் 8 வரை பொது மருத்துவமும், வாரம் ஒரு முறை மகப்பேறு மருத்துவ சேவையும் வழங்கப்படுகிறது. இது மன்னார்குடி நகர மக்களிடையே மிகப்பெரும் வரவேற்றை பெற்று வருகிறது.