districts

வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்திடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 23 -  தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் மோசடி யில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் பெஸ்ட் ப்யூச்சர் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் இயங்கி வரு கிறது. இந்நிறுவனத்தினர் ரூ.10,000 முதல் ரூ.15,000 சம்பளத்தில் தனியார் நிறுவனங்களில் கால் சென்டர் பணி மற்றும் மேற்பார்வையாளர் பணி வாங்கித் தருவதாக வெளியிட்ட விளம்பரத்தை நம்பி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், வேலைக்கு நுழைவுக் கட்டணமாக தலா ரூ.150 மற்றும் வைப்புத் தொகையாக தலா ரூ.3000 செலுத்தியுள்ளனர். ஆனால், 2  மாதங்கள் ஆகியும் அவர்களுக்கு வேலையும் வழங்கப்படவில்லை, சம்பளமும் வழங்கப்படவில்லை.  இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குச் சென்று  கேட்டபோது, நீங்கள் சேர்ந்தது போல உங்களுக்குத் தெரிந்தவர்களை எங்க ளிடம் சேர்த்து விடுங்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தில் உங்களுக்கு கமிஷன் தருகிறோம். இதுதான் உங்கள்  சம்பளம் என்று கூறியுள்ளனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண்கள், தங்களுக்கு வேலை  வேண்டாம், கட்டிய பணத்தை திருப்பி  தாருங்கள் என கேட்டபோது, அந்நிறு வனத்தை நடத்தி வரும் பிரபாகரன், சிங்காரவேலன், பூவரசி ஆகியோர் ‘பணத்தை திருப்பி தர முடியாது’ என்று  கூறி தவறான வார்த்தைகளால் திட்டி யுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கெனவே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.  இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், பி.மாரியப்பன் மற்றும் சிஐடியு மாவட்டச் செயலாளர் ரவீந்தி ரன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கணேசன், சிபிஎம்  ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவிச்சந்தி ரன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.மேக நாதன் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முன்பு சாலையில் அமர்ந்து  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தையடுத்து காவல்துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாகிகள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக காவல்  நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  இதையடுத்து போராட்டம் தற்காலிக மாக விலக்கிக் கொள்ளப்பட்டது.