மயிலாடுதுறை, ஜூன் 13 - மயிலாடுதுறையை அடுத்துள்ள மாப்படுகை ஊராட்சியில் மாற்றுத் திறனா ளிகளுக்கு நூறு நாள் வேலை மற்றும் அட்டை வழங் காததை கண்டித்து, மாப் படுகை அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.கணேசன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டம் 2 நேரத் திற்கு மேல் நீடித்தது. இந்நிலையில், சாலை துணை வட்டார வளர்ச்சி அலு வலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செய லர், காவல்துறை அதிகாரி கள் நடத்திய பேச்சுவார்த்தை யில், உடனடியாக நூறு நாள் அட்டை வழங்குவ தென்றும், வருகிற வியாழன் முதல் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நூறு நாள் வேலை கொடுப்பதாகவும் உறுதியளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.