districts

img

ஊரக வேலைத் திட்டத்தில் சட்டக் கூலியை அமலாக்குக! அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் பெருந்திரள் முழக்கம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 28- தேர்தல் வாக்குறுதிப்படி ஊரக வேலைத் திட்டத்தில் வேலை நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்திட வேண்டும். தினக் கூலியை மாநில அரசு பங்காக ரூ.100 சேர்த்து  ரூ.381 ஆக உயர்த்தி முழுமையாக வழங்கிட  வேண்டும். காலை 7 மணிக்கு வேலைத்தளத் திற்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும். வேலை அட்டை பெற் றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் முழுமை யாக வேலை அளிக்க வேண்டும். ஊரக வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு  கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி வேலை  வாய்ப்பை பறிப்பதை கைவிட வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவித் திட்டத்தை தொடர்ந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத் திற்கு சங்க ஒன்றியச் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி  விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளா ளர் சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்டத் தலைவர் செல்வ ராஜூ, மாவட்ட செயலாளர் தங்கதுரை ஆகி யோர் பேசினர். பின்னர் தமிழக முதல்வருக் கான கோரிக்கை மனுவை அந்தநல்லூர் வட்டார  வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர்.  முசிறியில் ஒன்றியச் செயலாளர் முருகானந் தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா ளர் பழநிசாமி உள்ளிட்டோர் பேசினர். தொட்டியத் தில் ஒன்றியச் செயலாளர் முருகன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்  ராமநாதன், முருகானந்தம் ஆகியோர் பேசி னர். மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, திருவெ றும்பூர், லால்குடி, வையம்பட்டி, உப்பிலிய புரம், தா.பேட்டை, துறையூர் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலை யத்தில் பேரணியாக துவங்கி திருத்துறைப் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியச்  செயலாளர் வி.ரவி, எம்.முருகதாஸ், நகரச் செய லாளர் எஸ்.தண்டபாணி தலைமை வகித்தனர்.  பல்வேறு கோரிக்கைகளை விளக்கி மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் கண்டன  உரையாற்றினார். கட்சியின் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் கே.தமிழ்மணி, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் கலைச்செல்வி உள்ளிட்ட  பலர் கண்டன உரையாற்றினர். முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. குடவாசல் ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் விதொச மாவட்டத் தலைவர் கே.கலை மணி கண்டன உரையாற்றினார்.