districts

img

கல்வியின் அவசியத்தை உணர்த்திய மாற்றுத்திறனாளி மாணவி

மயிலாடுதுறை, மே 5- தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5 அன்று தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  மயிலாடுதுறை மாவட் டத்தில் 89 பள்ளிகளில் கல்வி பயிலும் 5,042 மாணவர்களும் 5,353 மாணவிகள், 52 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 395 மாணவ மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.  இந்நிலையில் மயிலாடு துறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு கைகளும் இல்லாத லெட்சுமி என்ற மாணவி ஆசிரியர் உதவியுடன் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்.  பிறந்தபோது இரண்டு கைகளும் இல்லாத பெண் குழந்தை என்பதால் பெற் றோரால் புறக்கணிக்கப்பட்டு மயிலாடுதுறை ஆதரவற் றோர் காப்பகமான அன்ப கத்தில் இவர், இரண்டு வயது குழந்தையாய் இருந்த போதிலிருந்து வளர்ந்து வருகிறார்.  தற்போது தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவியை பலரும் பாராட்டினர்.