புதுக்கோட்டை, பிப்.18- கை, கால்களில் விலங்கிட்டு இந்தியர்களை, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்துவதைக் கண்டித்து அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தினர் திங்கட்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தேசியச் செயற்குழு உறுப்பினர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநிலச் செயலாளர் ஜீ.ஆர். ரவீந்திரநாத் கண்டன உரையாற்றினார்.