districts

img

குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் வரலாற்று சாதனை படைத்த தமிழக முதல்வர்

“வரப்புயர நீர் உயரும்; நீருயர நெல் உயரும்; நெல்லு யரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்; கோலுயரக் கோனுயர்வான்” - என்றார் ஒளவை மூதாட்டி. இந்த மூதுரைக்கேற்ப தமிழக முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக வேளாண்மைத் துறை யின் மூலம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.  தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, 2021 - 2022 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கென்று தனி  நிதிநிலை அறிக்கையை 14.8.2021 அன்று சட்டப் பேர வையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கியத் திட்டங்கள் மற்றும் முக்கியக் கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  அதனடிப்படையில் ஈரோடு, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் விளைபொருளைச் சேமிக்கவும், பரிவர்த்தனை செய்வதற்கான வசதிகள் செய்து தருவதற்காகவும் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை, மதுரை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள  ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.3.5 கோடி மதிப்பில் 28 உலர்கலங்கள் அமைத்திட ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழக முதல்வர் பதவியேற்ற பதவியேற்ற மிகக் குறுகிய காலத்தில், சாகுபடிக்கு மேட்டூர் அணையை குறுவைக்காக திறந்து விட்டு, “உண்டிகொடுப்போர் அண்டி பிழைத்தலாகாது” என்ற உயரிய நோக்கில், டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்காக குறுவை  சிறப்பு திட்டத்தை அறிவித்தார்.  குறுவை சாகுபடிக்காக திட்டமிட்டபடி, கடந்த ஆண்டு  ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப் பட்டுள்ளது. 2021 - 2022 ஆம் ஆண்டில், 125 லட்சம்  மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி என்ற இலக்கினை  அடைய தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.  காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக, திட்டமிட்டபடி, இந்த ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டு கடைமடைப் பகுதி கள் வரை நீர் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, 4,061 கி.மீட்டர் நீளமுள்ள கால்வாய்களைத் தூர்வாரும்  பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டன.  நமது தமிழக முதலமைச்சர், தொகுப்பு திட்ட  வரலாற்றிலேயே முதன் முறையாக பயிர் விளைச்ச லுக்கு முக்கிய தேவையான தழை, மணி, சாம்பல் சத்து களை யூரியா-90 கிலோ, டி.ஏ.பி-50 கிலோ, பொட்டாஷ் -  25 கிலோ என இலவசமாக அளித்து விவசாயிகளின் இதயத்தில் இடம் பிடித்தார்.  இவ்வாறு விவசாயிகளின் தேவையை விதவித மாய் தூர்வாரி கொடுத்து, குறுவை சாகுபடி திட்டத்தை யும் அறிவித்து பூர்த்தி செய்ததனால், தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சாவூர் மாவட்டம் வரலாற்றி லேயே, 48 ஆண்டுகளுக்குப் பின்னர் குறுவை சாகுபடி  பரப்பு 66,454 ஹெக்டேராக உயர்ந்துள்ளது.

 டெல்டா மாவட்டத்தில் உணவு உற்பத்தியை அதிக ரிக்கும் நோக்கத்தோடு, சாகுபடி பரப்பினை அதி கரிக்கும் நோக்கத்திற்காகவும், தமிழக முதல்வரால் குறுவை பருவத்திற்கு 2021-22 ஆம் ஆண்டு குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.  மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட் டதைத் தொடர்ந்து இத்திட்டமானது ரூ.50 கோடி நிதி ஒதுக் கீட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை, கடலூர். அரியலூர், திருச்சி ஆகிய ஏழு மாவட் டங்களில் செயல்படுத்தப்பட்டது. மாவட்டத்திற்கு ரூ.14.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறுவை தொகுப்புத் திட்டத்தில் நெல் விதைகள், ரசாயன உரங்கள் மற்றும் பசுந்தாள் பயிர் விதைகள் 50  சதவீதம் மற்றும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட் டது. இதனால் தஞ்சை மாவட்டத்திற்கு அளிக்கப்பட்ட இலக் கான 42,500 ஹெக்டேரைவிட, 23,954 ஹெக்டேர் அதி கரித்து மொத்தம் 66,454 ஹெக்டேர் சாகுபடி அதிகரித் துள்ளது. இது கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால் உணவு தானிய உற்பத்தி இயக்கத்தில் மொத்த உற்பத்தியை விட 54 சதவீதம் அதிக சாதனை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் மாவட்டத் தில் குறுவை தொகுப்புத் திட்டத்தில் நெல் விதைகள் விதைகிராம திட்டத்தில் 630 மெ.டன்னும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் 230 மெ.டன்னும் மொத்தம்  860 மெ.டன் வழங்கப்பட்டுள்ளன.  ரசாயன உரங்கள் ஏக்கருக்கு இரண்டு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டிஏபி மற்றும் அரை மூட்டை பொட்டாஷ் 57,011 ஏக்கருக்கு வழங்கப்பட்டுள்ளன. பசுந்தாள் பயிர் விதைகளான தக்கை பூண்டு 7200 ஏக்க ருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால் 93,227 குறுவை சாகுபடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தை சேர்ந்த விவசாயி  கு.ஆசைத்தம்பி மற்றும் சூரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி எஸ்.குமார் ஆகியோர் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்

. தொகுப்பு க.பிரேமலதா செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

 சே.கார்த்திக்ராஜ் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), தஞ்சாவூர்.