கும்பகோணம், பிப்.12 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தஞ்சை மாவட்டத்தில் கும்ப கோணம் பகுதியில் பல தொழிற்சங்கங்களை உருவாக்கிய ஸ்தாபக தலைவரும், கும்பகோ ணம் தாலுகா, நகரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை அடித்தளமிட்டதில் முக்கிய பங்கு வகித்த வருமான தோழர் வி.என் என்று அழைக்கப் பட்ட வே.நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவு தின செவ்வணக்கம் புகழஞ்சலி கும்ப கோணம் காந்தி பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்றது. தோழர் வே.நடராஜன் நினைவு தின புகழஞ்சலி நிகழ்ச்சியில் சிபிஎம் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், சிஐடியு மாவட்ட பொருளாளர் எம்.கண்ணன், கும்பகோணம் மாநகராட்சி செயலாளர் செந்தில்குமார், கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் ஜே.ஜேசுதாஸ், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜ கோபாலன் மற்றும் ஆட்டோ மைதீன், ஏ.ஆர். ஆர் தொழிற்சங்க நிர்வாகிகள்-தொழிலா ளர்கள், சிஐடியு, வாலிபர் சங்கத்தினர் பங்கேற் றனர்.
திருவிடைமருதூர்
தோழர் நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவு தின புகழஞ்சலி கூட்டம் கட்சியின் திருவிடைமருதூர் அலுவலகத்தில் தோழர் பிஆர் நினைவரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஜீவ பாரதி, பக்கிரிசாமி ஒன்றிய குழு உறுப்பினர் கள் சேகர், சங்கர், திருபவனம் பேரூராட்சி சிபிஎம் 8 ஆவது வார்டு வேட்பாளர் சுப்ரமணி யன் ஆகியோர் நடராஜனின் உருவப் படத் திற்கு வீரவணக்கம் செலுத்தினர்.