நாமக்கல், பிப்.4- எலச்சிபாளையம் அருகே ஆழ் துளை கிணற்றை அகற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்காத அதி காரிகளை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர், அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து நூதனப் போராட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் அருகே உள்ள பெரிய மணலி ஊராட்சி புதுவளவில் 40 வருடங்களுக்கு முன்பு 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு அடி பம்பு வசதியுடன் அமைக்கப்பட் டது. இதனை தனி ஒரு நபர் ஜேசிபி இயந்திரம் மூலம் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு இடித்து தரை மட்டமாக்கியுள்ளார். இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு ஊர் பொது மக்கள் தகவல் தெரிவித்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஊராட்சி நிர்வாகம் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படா மல், நான்கு மாத காலமாக மெத் தனப்போக்கில் செயல்பட்டு வந் தது. இதன் காரணமாக, மெத்தனப் போக்கில் செயல்படும் அதிகாரி களை பாராட்டி மலர் கொத்து மற் றும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கும் போராட்டத்தை மார்க் சிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று மேற்கொண்டனர். பெரியமணலி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தேவராஜன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.தமிழ் மணி, சு.சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பழனியம்மாள், ஏலூர் முன்னாள் வார்டு உறுப்பி னர் ஜோதிமணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் துரைசாமி, பூபதி முருகன், விஜய், கிளைச் செயலா ளர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்பின் போராட் டக்காரர்கள் மாலை அணிவிக்க சென்ற போது, அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்து போராட் டத்தை கைவிட வேண்டும், என கோரிக்கை வைத்தனர். அப்போது, எழுத்துப்பூர்வமாக உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என எழுதித்தர வேண்டும். அப்பொழுதுதான் போராட்டத்தை திரும்பப்பெறு வோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந் திரன், போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர். பிப்.11 ஆம் தேதிக் குள் உரிய நடவடிக்கை எடுக்கப் படும், என உறுதியளித்தார். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.