districts

டெண்டர் முறை இல்லாமல் கடை ஒதுக்கி தர வேண்டும்

சிவகங்கை, பிப்.3- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்  புரம் அய்யனார் கோவில்  வளாகத்தில் உள்ள 45 கடை களில் 20 கடைகள் கட்டப் பட்டு அதற்கு டெண்டர் விடப்  பட்டது. இதனை ரத்து செய்து விட்டு நூறு ஆண்டுகளுக்கு  மேலாக உள்ள வியாபாரி களுக்கு அந்த கடைகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தி மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிறு  வியாபாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் தாலுகா மடப் புரம் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் கோவில்  உள்ளது. இக்கோயில் வளா கத்தில் வாரத்தில் இரண்டு தினங்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திர ளான பக்தர்கள் வந்து செல்  வார்கள். இக்கோயிலில் 20 கடைகள் கட்டப்பட்டுள்ளன. 20 கடைகளுடன் மேல் மாடியில் தங்கும் விடுதி கட்டப்பட்டு இருக்கிறது. சில மாதங்கள் முன்பு கூட்டு றவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இக்கட்டி டங்களை திறந்து வைத்தார்.  இங்குள்ள வியாபாரி டெண் டர் மூலமாக கடைகள் ஒதுக்க  வேண்டாம் என்றும், ஏற்க னவே கடை நடத்தி வரக்  கூடிய சிறு வியாபாரி களுக்கு ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மொத்தம் 45 கடைகள் உள்ளன. 20 கடை கள் சம்பந்தப்பட்ட வியாபாரி களுக்கு ஒதுக்கி கொடுத்து விட்டு, மற்ற கடைகளில் தக ரக் கொட்டகைகள் அமைத்து கடை நடத்துவதற்கு உதவிட  வேண்டும் என்று மனு அளித்  துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் திருப்புவனம் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வ ரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, அய்யம்பாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரவி, ஜெயராமன், மடப்புரம் கிளைச் செயலாளர் ராஜேந்  திரன் ஆகியோர் மடப்புரம் கோவில் செயல் அலுவலர் கணபதி முருகனை சந்தித்து  மனு அளித்தனர். அப்போது இங்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக கடைகள் நடத்தி வருகிற சிறு  வியாபாரிகளை பாது காக்கும் விதத்தில் செயல் பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.