districts

img

ஒப்பந்த தொழிலாளர் பட்டினிப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச்,15, திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக  நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  பணிபுரிந்து வந்தனர். கொரோனா நோய் தொற்றுக் காலத்திலும் அர்ப்ப ணிப்போடு பணியாற்றினர்.  இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம்16-ஆம் தேதி  28 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.  இவர்களது குடும்பம் இந்த வேலையை மட்டுமே நம்பி யுள்ளது. எனவே இவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மீண்டும் வேலை வழங்கக் கோரி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று  மருத்துவமனை வளாகத்தில்  பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு  சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ராமர் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார்.  சிஐடியு நிர்வாகிகள் செல்வி,  ஜெயபால், மணிமாறன், ஜெய பால், கருணாநிதி, ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலா ளர் கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.  ஒப்பந்தத் தொழிலா ளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.