புதுக்கோட்டை, செப்.3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எஸ்.ரெகுநாதனின் படத்திறப்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வரங்குளம் ஒன்றியக்குழு உறுப்பினரா கவும், ஆலங்குடி நகரச் செயலாளராகவும் பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற் றியவர் தோழர் எஸ்.ரெகுநாதன் (72). விவ சாயிகள் இயக்கத்திலும் பல பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியவர். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆக.10 அன்று இயற்கை எய்தினார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி புதுக் கோட்டை விடுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. ஒன்றியச் செய லாளர் எல்.வடிவேல் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ எஸ்.ரெகுநாதனின் உருவப்படத் தைத் திறந்து வைத்தார். கட்சிக் கொடியை முன்னாள் மாவட்டச் செயலாளர் பெரி.குமாரவேல் ஏற்றி வைத்தார். மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.ஸ்ரீதர், சு.மதியழகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.சலோமி, பி.சுசீலா, நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணி யன் உள்ளிட்டோர் புகழஞ்சலி உரையாற் றினர்.