திருச்சிராப்பள்ளி, பிப்.18- தோழர் இ.பாலானந்த் நூற்றாண்டையொட்டி சிஐடியு தொழிற்சங்க வகுப்பு செவ்வாயன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. வகுப்பிற்கு சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், தொழிலாளி வர்க்க அணி திரட்டலும், பாசிச மதவெறி அபாயமும் என்ற தலைப்பில் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், உடனடி இயக்கங்கள் குறித்து மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், மார்ச்.8 மகளிர் தினத்தையொட்டி, அனைத்து தொழிற் சங்க பெண்களையும் இணைத்து கருத்தரங்கம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப் பட்டன. இதில், மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, 243 சிஐடியு செய்தி ஆண்டு சந்தா வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.