குடவாசல், ஏப்.6 - பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை சார்ந்த அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடவாசல் மற்றும் நன்னிலம் அரசு கலை அறிவி யல் கல்லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். குடவாசல் எம்ஜிஆர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக் கணித்து ஒகை ஆற்றுப்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இரா.சூர்யா தலைமை வகித்தார். கல்லூரிக்கான கோரிக்கைகளை விளக்கி மாநில துணை செயலாளர் ஆறு. பிரகாஷ் பேசுகையில், குடவாசல் கல்லூரி தொடங்கிய நான்கு வருடங்கள் கடந்தும் தற்காலிகமாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் துவங்கப் பட்டு, தற்போது வரை கல்லூரிக்கு சொந்த கட்டிடம் இல்லாமல் சுமார் 850 கல்லூரி மாணவ, மாணவிகள் முறை யான கட்டிட வசதி, கழிவறை வசதி யின்றி பல்வேறு இடர்பாடுகள் இடையே படித்து வருகின்றனர். கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டக் கோரி மாண வர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி யும் இதுவரை கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்படாமல் உள்ளன. இதனை கண்டித்து விரைவில் போராட்டம் அறி விக்கப்படும் என குறிப்பிட்டார். போராட்டத்தில் மாவட்ட செயலா ளர் இரா.ஹரிசுர்ஜித் உட்பட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதேபோல் நன்னிலத்தில் உள்ள பாரதிதாசன் அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் மாணவர்கள் கட்டண உயர்வை கண்டித்து வகுப்பு புறக் கணிப்பு செய்தனர்.