districts

திருச்சி முக்கிய செய்திகள்

பாபநாசம் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினம்

பாபநாசம், நவ.14-  நாட்டின் முல் பிரதமரான நேருவின் பிறந்த தினம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினம் நடைபெற்றது.  இதையொட்டி பள்ளி மாணவர்கள் தேசத் தலை வர்களைப் பற்றி பேசினர். பாடல் பாடுவதில் தங்களது திறனை வெளிப் படுத்தினர். பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் மாணவர்களுக்கு நோட்டு, எழுது பொருட்கள், பிஸ்கட் வழங்கப்பட்டன. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் செந்தில், செயலர் பன்னீர் செல்வம், வட்டாரத் தலைவர் கணேசன், ஜெகதீசன், பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ், ஆசிரியை அமுதா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர். 

அனைத்து வணிகர் சங்க வெள்ளி விழாக் கூட்டம்

பாபநாசம், நவ.14-  ராஜகிரி பண்டாரவாடை அனைத்து வணிகர் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாக் கூட்டம் பாபநாசத்தில் நடை பெற்றது.  கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். முன்னதாக செயலர் செல்வம் வர வேற்றார். இதில் பாபநாசம் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு, ராஜகிரி ஐ.ஓ.பி வங்கி முதுநிலை மேலாளர் மாரியப்பன், பேங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் சங்கீதா பானு, வணிகர் சங்க பேரவை மாவட்டத் தலைவர் புண்ணிய மூர்த்தி, மாவட்டச் செயலர் முருகேசன், மாவட்டப் பொரு ளாளர் சதீஷ்குமார், தஞ்சை நகரத் தலைவர் வாசுதேவன்,  நகரச் செயலர்  கந்தமுருகன், நகரப் பொருளாளர் செல்வம், ராஜகிரி ஊராட்சி மன்றத் தலைவர் முபாரக் ஹுசைன் உட்பட பலர் பங்கேற்றுப் பேசினர். இதில் உறுப்பினர்கள் பங்கேற்றனர். சங்கப் பொருளாளர் சிக்கந்தர் பாட்ஷா நன்றி கூறினார்.  

கங்கைகொண்டசோழபுர பிரகதீஸ்வரருக்கு இன்று அன்னாபிஷேகம்

அரியலூர், நவ.14-  ஜெயங்கொண்டம் அருகே, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பிரகதீஸ்வரருக்கு மகா  அபிஷேகம் நடைபெற்றது. இந்தவருட அன்னாபிஷேகத்தை முன்னிட்டு புதனன்று கணக்க விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. வியாழ னன்று, 14 ஆம் தேதி பிரகன்நாயகிக்கும் பிரகதீஸ்வர ருக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. இன்று 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு 100 மூட்டை அரிசியை 5 கொதிகலன்களில் நீராவியினால் சாதம் சமைத்து, ஆற வைத்து காலை 9 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய துவங்கப்பட்டு, மாலை வரை அபிஷேகம் நடை பெறும். பின்னர் பலவிதமான பலகாரங்கள் மற்றும் மாலைக ளால் அலங்கரிக்கப்படும்.  தீபாராதனை செய்யப்பட்டு இரவு 8 மணி அளவில் லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட சாதத்தினை பக்தர்களுக்கும், மீதமுள்ள சாதத்தினை ஆறு ஏரி குளங்களில் மீன்களுக்கு உணவாகவும் அளிக்கப்படும். 

கூட்டுறவு வார விழா தொடக்கம்

பெரம்பலூர், நவ.14-  பெரம்பலூர் மாவட்டத்தில் 71 ஆவது கூட்டுறவு வார விழா துவங்கியது. பெரம்பலூர் சங்குபேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பி னர் ம.பிரபாகரன் முன்னிலையில் வியாழக்கிழமை கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்து, கூட்டுறவு வார விழா உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க. பாண்டியன், அட்மா தலை வர் வீ. ஜெகதீசன், துணைப் பதிவாளர்கள் பா.சிவக்குமார்,  இளஞ்செல்வி, சங்கச் செயலாளர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு  விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, நவ.14-  புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பாடு பட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோ ரில் சிறந்தோர்களுக்கு  2024-2025 ஆம் ஆண்டு திருவள்ளு வர் திருநாளில் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்ப்பட உள்ளது. இவ்விருது பெற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு வாழ்க்கை தரம் உயர பாடுபட்ட ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து 30.11.2024 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  விண்ணப்பத்தை, புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரி வித்துள்ளார்.

கூலித் தொழிலாளியின் உடல் தானம்

புதுக்கோட்டை, நவ.14- புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு, கூலித் தொழிலாளியின் உடல், வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெரிய கள்ளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் எல்.செல்வம் (60). தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும் தொழி லில் ஈடுபட்டு வந்தார். சிறு நீரகப் பாதிப்பினால் புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த இவர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். தான் இறந்த பிறகு, தனது உடலை மருத்துவக் கல்லூரியில் தானம் செய்யு மாறு தனது குடும்பத்தி னரிடம் ஏற்கனவே கூறி இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, செல் வத்தின் உடலை புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்ய அவரது மனைவி சித்ரா, மகன் முகிலன் ஆகியோர் சம்மதித்தனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு, செல்வத் தின் உடல் கொண்டு செல் லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்கு செய்த பிறகு ஆம்பு லன்ஸ் மூலம் அவரது உடல் மீண்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி யின் உடற்கூறாய்வுத் துறைப் பேராசிரியர் பூங்கோ தையிடம் வியாழக்கிழமை தானமாக ஒப்படைக்கப் பட்டது.

லெனின் நூற்றாண்டு  கொடியேற்று விழா

புதுக்கோட்டை, நவ.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கேர்டை மாந கரக்குழு சார்பில் புரட்சி யாளர் லெனின் நூற்றாண்டு மற்றும் நவம்பர் புரட்சிதின கொடியேற்று, கல்வெட்டுத் திறப்புவிழா செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை-தஞ்சா வூர் தேசிய நெடுஞ்சாலை யில், அரசு மருத்துவக் கல் லூரி அருகில் நடைபெற்ற விழாவுக்கு கட்சியின் மாநகர செயலாளர் புதுகை பாண்டியன் தலைமை வகித்தார். கட்சியின் கொடி யை மாநிலக்குழு உறுப்பி னர் எம்.சின்னதுரை எம்எல் ஏ., ஏற்றி வைத்து சிறப்பு ரையாற்றினார். கல்வெட் டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பொன்னி திறந்து வைத்துப் பேசினார் விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜன், துரை.நாரா யணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.சோலை யப்ன், டி.காயத்திரி, மாநக ரக்குழு உறுப்பினர்கள் பழ. குமரேசன், எம்.ஏ.ரகுமான், எம்.சித்ரா, பி.நித்திஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவர் ஆர்.கார்த்திக் நன்றி கூறினார்.

நவ.23 இல் தஞ்சை மாவட்டத்தில்  கிராம சபைக் கூட்டங்கள்  

தஞ்சாவூர், நவ.14-  வரும் 23 ஆம் தேதி, சனிக் கிழமை காலை 11 மணிக்கு,  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிக ளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.  இக்கிராம சபைக்கூட்டத் தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து, பொதுமக்களுடன் அனை த்து துறை அலுவலர்க ளும் பங்கேற்று விவாதிக்க வுள்ளனர்.  எனவே, இக்கிராம சபைக் கூட்டத்தில் தஞ்சா வூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண் டுள்ளார். 

அய்யம்பேட்டையில் குழந்தைகள் தினம் 

பாபநாசம், நவ.14-  அய்யம்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குழந்தை கள் தினம் நடைபெற்றது. இதில் அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் சார்பில் பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு பென்சில், ரப்பர், ஸ்கேல் அடங்கிய பென்சில் பாக்ஸ் வழங்கியதுடன், பள்ளியின் பயன்பாட்டிற் கென 6 சேர் வழங்கப்பட்டது. இதில் அய்யம் பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் தலைவர் ரவிச் சந்திரன், செயலர் முத்துக் குமரன், பொருளாளர் கோபால், உறுப்பினர்கள் சாதிக் பாட்சா, ரகமதுல்லா, பள்ளித் தலைமை ஆசி ரியை சுமதி, ஆசிரியை, மாணவர்கள் பங்கேற்றனர்.