districts

img

கழுகுப்புலிக்காடு ஊராட்சியில் ரூ.2.15 கோடியில் சாலைப்பணி துவக்கம்

தஞ்சாவூர், நவ.14 -  கழுகுப்புலிக்காடு ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பிரதம மந்திரி சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கழுகுபுலிக்காடு முதல் பைங்காட்டு வயல் வரை ரூ.2 கோடியே 15 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி  துவக்க விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. கழுகுப்புலிக்காடு ஊராட்சி மன்றத்தலைவர் சு.பாஸ்கர் தலைமை வகித்தார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர்  ச.முரசொலி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர்  நா.அசோக்குமார் ஆகியோர் புதிய சாலைப்பணியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலி வலம் அ.மூர்த்தி, பட்டுக்கோட்டை மேற்கு திமுக ஒன்றியச் செயலாளர் பா.ராமநாதன், பட்டுக்கோட்டை ஒன்றியக் குழு தலைவர் டி.பழனிவேல், துணைத் தலைவர் லெ.முரு கானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ரூஸ்வெல்ட், அ.அப்துல் மஜீத், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீர. சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான் கென் னடி, கை.கோவிந்தராஜ், ஒன்றிய செயற்பொறியாளர் பி.செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் வி.ராஜேந்தி ரன், ஒன்றியப் பொறியாளர் ஆர்.லதா, திமுக நிர்வாகி கள், கிராம பிரமுகர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர் கள் கலந்து கொண்டனர்.